Friday, September 17, 2010

ஹைக்கூ-தமிழச்சி

தீண்டப்பட்டது  கூந்தலாகவே இருப்பினும்
சிணுங்குகிறாள்
என் தமிழச்சி
வீணை...

அம்மா

உன் நினைவுகள் நெருடும் நேரங்கள் 
மட்டும் நரகத்தில் கழிகிறது அம்மா 
ஆனால் நாள் முழுதும் 
உன் நினைவுகளோடு நகர்கிறது அம்மா.... 
உன் சுவாச காற்று தீண்டாமல் 
சவமாக கிடைகிறேன் அம்மா... 
உடல் மட்டும் நடமாட 
உயிரோ..
நீ வழி அனுப்பி வைத்த தருணத்தில்
 எங்கோ வழி மாறி தொலைந்து விட்டது அம்மா...
தொலை தூரத்தில் உன்னை தொலைத்து விட்டு 
தொலை பேசியில் தேடுகிறேன் அம்மா .
செவியில் பூத்த உன் குரல் கேட்டு 
நேரில் நீயோ என்ற குதுகலத்தில் 
எட்டி பார்த்த கண்ணீர் 
நீ இல்லை என்ற சோகத்தில் 
தொலைபேசியிலேயே செத்து ஒழிந்து விட்டது அம்மா.... 
உன் நினைவுகளை கட்டி அணைத்து கொண்டு 
காலம் முழுதும் அழுகிறேன் அம்மா....
உன் கால் தடத்தில் கரை சேர..
missing my mom due to college lyf.....