Monday, November 15, 2010

சடலம்

தளிருகளின் 
பார்வையை பறித்து 
கால்களை முடமாக்கி 
உணர்வுகளை ஊனமாக்கி
கனவுகளை கிழித்தெறிந்து 
வாயையும் கைகளையும் மட்டும் கரிசனத்தோடு காவல் காத்து 
கையில் திருவோடை அணிகலனாய் பூட்டி 
வாயில் பிச்சை என்ற வார்த்தைக்கு மட்டும் உரமிட்டு வளர்த்த 
அந்த சடலங்கள் இன்றே செத்தொழியட்டும்.

விடியல்

விடியலுக்காக
விடியும் 
வரை 
விழித்திருந்தேன் இனி 
விடியவே விடியாதென்று 
விழித்திரைகளை இணைத்துக்கொண்டு 
விழிகளை ஒளித்துகொண்டேன் 
விடிந்தது...
விடிந்த பொழுது விழிகளுக்கு தெரியவில்லை 
வெளிச்சம் கண்ணுக்குள் கசிந்தும் கண் திறக்க தைரியம் இல்லை

உண்மை உணர்ந்தேன் என் 
விழி மூடும் நேரத்தில் இனி என் 
விழி 
விழித்தாலும் 
வெளிச்சமில்லை..

பள்ளிக்கூடம்....

நிர்வாணமும் நெருடல் அளிக்காத நாட்கள்
தவழும் தேசம் தாண்டிய அந்த பருவம்
வெள்ளையாய் வெளி வந்த வார்த்தைகள்
வாயினிலே வாழ்ந்த என் கைவிரல்கள்
என் மழலை பருவத்தில் மைல்கல்...
என் பள்ளிக்கூடம்....

முட்டி தாண்டாத கால்சட்டை
எண்ணெய் தோய்த்த என் சிரம்
முதிகில் மிதந்த புத்தக பை
அதில் சங்கீதம் வாசித்தபடி விளையாடிய
என் குச்சி டப்பா...

மழலை சுதந்திரம் மறிக்க பட்ட நாள்...
என் பள்ளி முதல் நாள்...

பழகி போன என் பள்ளியில்
பகிர தொடங்கினேன் வார்த்தைகளை..
விஷம் என்று நினைத்த அந்த அமிர்தத்தின் சுவை
உணர்ந்தேன்..
ருசித்தேன்...
10 வயதில் தொடக்கம் முடிவுற்றது...

பள்ளி மாறி பக்குவம் அடைந்தேன்...
பென்சில்கு விடைகொடுத்து பேனாவை கரம் பிடித்தேன்...
வார்த்தைகளோடு உணவும் உணர்வும் பரிமாறிக்கொள்ள தொடங்கினேன்..

கை தட்டிய கலை நிகழ்சிகள்
பரிசு வாங்கிய புத்தகம்
மண்டியிட்ட்ட வகுப்பறை வாசல்
கிறுக்கப்பட்ட கரும்பலகை 
மதியம் மயங்கும் அந்த குச்சி ஐஸ்
புறக்கணிக்கும் வகுப்புகள்
புரியாத புதிராய் வினாத்தாள்
கரை படியா விடைத்தாள்
உயிரோட்டமான நண்பர்கள்
செத்தாலும் மறவாத ஆசிரியர்கள்...
இப்புடி என் வாழ்வில் இருந்த பிரிக்க முடியாத அந்த பள்ளி பருவத்தில் இருந்து நினைவுகள் என்ற ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு
கண்ணீருடன் கரை ஏறுகிறேன்..

அன்புடன்

உன் பெயர் எழுதி தொடங்க பட்ட என் காதல் கடிதம் 
என் பெயர் எழுதாமலே முடிகிறது.
கிழியாமல் கரை சேர...
அரவணைக்க ஆள் இல்லாமல் 
அனாதையாய் அழுகிறது 
"அன்புடன்"

இப்படிக்கு

கவிதை ஆகி போனது நீ எழுதிய 
சிறுகதை ..
"இப்படிக்கு" 
தாண்டி என் 
கண்கள் கண்டதால் .

காதல் கடிதம்...

மறுக்க
பட்ட 
காதலுக்கு 
மருந்தாய் 
அமைந்தது
உன் 
விரல் 
தீண்டி 
கிழிக்கப்பட்ட 
காதல் கடிதம்...

காதல் தோல்வி

கால் விரலில் கார் ஏறி கட்டை விரலில் இழந்தவன் நான்
"பத்தில் ஒன்னு போனால் போட்டும்" என்று
தாய்க்கு தைரியம் கூறியவனும் நானே
இன்றோ

என்னவளால்....

முள் குத்தி முடமாகி கிடக்கிறேன்...
கண்ணீர் கசிந்து எடை குறைகிறது ...
தலையணைக்கும் போர்வைக்கும் காய்ச்சல் அடிக்கிறது
என் கண்ணீரால்
இதுதான் காதல் தோல்வியா...
விடை கிடைக்காமல் விடை பெறுகிறேன்..

பாவி

பத்து மாதம் என்னை பக்குவமாய் சுமந்து
பிரசவத்தில் ,
என்னை விட்டு பிரிய மனமில்லாமால் கதறி அழுதவளை
கண்ணீரில் நிறையவிட்டு
என் இதயத்தை கூட சுமக்காதவளுக்காக இன்று கல்லறையில் மடிந்து கிடக்கிறேன்
நான் பாவியே 

போற்றுகிறேன்

சற்றும் நீ கண்டுகொள்ளாததால்... 

மழை என்ற புனைபெயருடன் 
கண்ணீர் சிந்தும் மேகங்களையும்

உள்ளதை கிழித்து அந்தி வானம் என்ற போர்வையில்
ரத்தம் தெறிக்கும் வானத்தையும்

எந்நேரமும் உன்னை தொழுது
உன் கால் அடியில் கிடக்கும் உன் நிழலையும்

போற்றுகிறேன்...
இன்னும் கல்லறைக்கு சொந்தமாகாததிற்கு...

சருகு

என்னவளே...
சருகாகவே முளைத்த என் காதலை நான் 
உதிர்ந்த பின்பு தளிராக்கியது ஏன்???

என்னவளே..

மதுவில் மறு வாழ்வு
புகையில் புதைந்த உதடுகள்
என் கவிதை கிறுக்கல்களின் கதா நாயகனாய் கல்லறை
கரும் புதருக்குள் ஒளிஞ்சிருக்கும் முகம்
நடை தெரிந்தும் தடுமாறும் கால்கள்
விழி உருண்டும் நகராத பார்வை
கண்ணீரால் நிறையும் என் கவிதை காகிதங்கள்
பட்டினி இருந்தும் பசி இல்லை
கனவு கண்டும் தூக்கம் இல்லை
விளக்கு எரிந்தும் இருளில் வாழ்க்கை
விடுதலை பெற்றும் அடிமையாய் மனம்
என்னவளே...
சிறகிருந்தும் ஒடித்து கொண்டு வாழ்கிறேன் உன் கூண்டில் அடைபட..

Monday, November 1, 2010

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி
சுவரொட்டி
புகைப்படமோ
சிரித்த முகத்தில்.

பிச்சை

இல்லை" என்று துரத்திவிடப்பட்ட
பிச்சைகார சிறுவனுக்கு
செவியில் சிந்தியது
"கா கா" என்று அந்த அம்மா
கரைந்து கொண்டிருப்பது 

காவு

களவாடிய ஒரு குட தண்ணீருக்காக
குடும்பத்தையே காவு வாங்குகிறது
ஆற்றின் வெள்ள பெருக்கு..

களவு

தூங்க செல்கிறது சூரியன்
போர்வைக்காக எடுத்து செல்கிறது
நம் நிழலை
களவாடி.

உலை

விறகை எரித்த கோவத்தில்
கொதிக்கிறது
அடுப்பில்
"உலை"

உளியின் ஓசை

சப்தமில்லாமல் உன்னை சிலை வடிக்கிறேன்
காட்டி கொடுத்தது
உளியின் ஓசை
"இதய துடிப்பு".

கண்ணீர்

உன் கணவனோட உன்னை காண மனமிலாமல்
கண்கள் மூடினாலும்
கள்ள தனமாய்
எட்டி பார்க்கிறது
கண்ணீர்..

வரம்

உள்ளே பெற்ற வரத்துக்கு வெளியே வரி
பிச்சைகாரர்கள் அணிவகுப்பு... 
கோவிலில்.
இரவு முழுவதும் கடலில் குளியல்
காய்ச்சல் அடிக்கிறது கதிரவனுக்கு 
கடலில் சூரிய உதயம் பார்த்த மீனவ சிறுவன்.
என் வாழ்நாளில் நான் திருடியதே இல்லை
"தேன்" விற்கும் தொழில் அதிபர் அறிக்கை ...

தேனிக்கள் வேதனை
நிலவை காணவில்லை 
கரை தாண்டி தேடி தொடங்கிவிட்டன 
அம்மாவசை அலைகள் 

நடைமுறை மனிதர்கள்

வாங்கி தந்த கை கடிகாரம் 
பிடிக்கவில்லை 
எறிந்துவிட்டேன் 
தவறி விழுந்துவிட்டது என்று எடுத்து குடுத்தான் 
கை இல்லாதவன்...

பிதாமகன்

உதிர்ந்து விழுந்த இலை 
சாலை ஓரத்தில் 
தகனம் செய்ய ஆள் இல்லை 
பிதாமகனாய் 
மணல் லாரி...

வறுமை

இனிமேல் திருடமாட்டோம் 
மரண தண்டனை வேண்டாம் 
கதறி அழுகின்றன எலிகள் 
ஏழை விவசாயின் காலை உணவாய் மாறி போனதால் …